வீட்டில் மதுபானம் பதுக்கி விற்ற வியாபாரி கைது

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.1: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, அரசு மதுபானங்களை மொத்தமாக வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார், ₹1.50 லட்சம் மதிப்பிலான 1,081 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(40), கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று அதிகாலை, பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மாரியம்பட்டி கிராமத்தில் ராதா(46) என்பவர் நடத்தி வரும் சந்து கடையில் மது வாங்கி உள்ளார். மதுபாட்டிலின் மூடியை திறந்தவுடன் ஒரு விதமான நெடியுடன் துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகமடைந்த செல்வம், இதுகுறித்து செல்வத்திடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் நன்கு போதை ஏறும் குடி என்று கூறியுள்ளார். இதையடுத்து செல்வம் மதுவை குடித்து விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு தலைசுற்றல் மயக்கம் ஏற்பட்டதுடன், வாந்தி எடுத்துள்ளார். அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து செல்வம் ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் எஸ்ஐ கெய்க்வாட் மற்றும் போலீசார், மாரியம்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று ராதாவின் வீட்டை சோதனையிட்டனர். அங்கு அரசு டாஸ்மாக் மதுபான கடையில் மொத்தாக வாங்கி வந்த பீர், பிராந்தி பாட்டில்கள் என 1,081 மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்தார். மொத்தமாக டாஸ்மாக் கடையில் மது பானங்களை வாங்கி, 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ராதாவை கைது செய்த போலீசார், அவர் வீட்டில் பதுக்கிய ₹1.50 லட்சம் மதிப்பிலான 1,081 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post வீட்டில் மதுபானம் பதுக்கி விற்ற வியாபாரி கைது appeared first on Dinakaran.

Related Stories: