வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை

பாணாவரம் : தமிழகம் முழுவதும், கொரோனா வைரஸ் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் பல்வேறு மருத்துவமனைகள் நிரம்பி வருகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம்,  முழுவதும் கிராம கொரோனா கண்காணிப்பு குழுக்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. அவர்கள் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசன், பார்த்தசாரதி ஆகியோர் உத்தரவின்பேரில், பாணாவரம் அடுத்த பெரப்பேரி ஊராட்சியில், கிராம கொரோனா கண்காணிப்பு குழுவினர், வீடுகள்தோறும் காய்ச்சல், சளி, இரும்பல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய்கள் மற்றும் அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதித்து கணக்கெடுத்தனர். மேலும் பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், கிராம கொரோனா  கண்காணிப்புக் குழுவை சேர்ந்த ஊராட்சி செயலர் ஆனந்தன்,  அங்கன்வாடி பணியாளர்கள் கலைவாணி, பத்மாவதி, வேண்டா, மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். …

The post வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை appeared first on Dinakaran.

Related Stories: