விவசாயிகள் மகிழ்ச்சி மேலக்காவேரி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு

கும்பகோணம், மே 5: கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட மேலக்காவேரி பகுதிகளில் உள்ள பல நாய்கள் நோய் வாய்ப்பட்டு மிகுந்த வேதனையான முறையில் ரணங்களுடன் தெருக்களில் அலைந்து திரிந்து வருகிறது. இந்த நாய்களின் மேலே நோய்களால் பாதிக்கப்பட்டு ஏற்பட்டுள்ள காயங்களால் படுகிற அவஸ்தைகளை பார்ப்பதற்கு பரிதாபமாகவும், மிகுந்த வேதனையாகவும் இருக்கிறது.

பள்ளிக் கூடங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் இந்த நோய்தொற்றுடன் உள்ள நாய்கள் சர்வ சாதாரணமாக உலாவருகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மாணவ- மாணவிகள், பெரியோர்களுக்கு இந்த நாய்கள் மூலம் அவர்களுக்கும் நோய்கள் தொற்றி, உடல் நலம் பாதிக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே உடனே இந்த நாய்களை பாதுகாத்திடவும், இந்த நோய்கள் பிடித்த நாய்கள் மூலம் இந்த பகுதி மக்களுக்கு பரவுகிற நோய்களிலிருந்தும் இந்த பகுதி மக்களை பாதுகாத்திடவும் தஞ்சை மாவட்ட நிர்வாகம், கும்பகோணம் மாநகராட்சி மற்றும் புளுகிராஸ் அமைப்பினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post விவசாயிகள் மகிழ்ச்சி மேலக்காவேரி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: