விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வீரர்கள் சாம்பியன்

சேலம், செப்.7: கொங்கணாபுரத்தில் உள்ள ஏஜிஎன் பள்ளியில், மாவட்ட அளவிலான தடகள வீரர், வீராங்கனைகள் தேர்வு நேற்று நடந்தது. இதில் மாவட்ட தடகள சங்க தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். ஏஜிஎஸ் பள்ளி நிர்வாக அலுவலர் இளங்கோ, போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 750க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி 20, 18, 16, 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வீரர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று முதலிடம் பிடித்தனர். ஹோலி ஏஞ்சல் பள்ளி இரண்டாம் இடம், எடப்பாடி சோழா தடகள சங்க வீரர்கள் மூன்றாம் இடம் பிடித்தனர். மாவட்ட அளவில் சிறப்பாக விளையாடிய 150 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் பங்கேற்பார்கள். மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள், கோவையில் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் விளையாட உள்ளனர்.

The post விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வீரர்கள் சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: