விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் விருதுநகர் மாணவர்கள்: கலெக்டர் வழியனுப்பி வைத்தார்

 

விருதுநகர், டிச.2: திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு விருதுநகர் மாவட்ட மாணவர்கள் கல்விச்சுற்றுலா செல்லும் பேருந்தை கலெக்டர் ஜெயசீலன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், கோடைகால பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி படிப்பதற்கு வழிகாட்டும் வகையில் கல்லூரிகளுக்கு கல்விச்சுற்றுலா,

உயர்கல்வி பயில விரிவாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது வருகிறது. அதன் தொடர்ச்சியாக அரசு பள்ளிகளில் பயிலும் 100 பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், 15 பொறுப்பாசிரியர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு கல்விச்சுற்றுலா செல்கின்றனர்.இவர்கள் செல்லும் பேருந்தை விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் ஜெயசீலன் நேற்று கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

The post விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் விருதுநகர் மாணவர்கள்: கலெக்டர் வழியனுப்பி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: