விசைத்தறி தொழிலாளர்கள் சொந்த ஊர் பயணம்

 

பல்லடம், அக்.10: பல்லடம் பகுதியில் வேலை இல்லாததால் விசைத்தறி தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகின்றனர். திருப்பூர், பல்லடம், சோமனுார், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில், விசைத்தறி காடா உற்பத்தி தொழில் பரவலாக நடந்து வருகிறது. உள்நாட்டு தேவை உட்பட, ஏற்றுமதியிலும் தனியிடம் பிடித்துள்ளது. நூல் விலை ஏற்ற இறக்கம், பஞ்சு பற்றாக்குறை, துணி ஆர்டர் இல்லை, மின் கட்டண உயர்வு போன்றவற்றால் ஜவுளி தொழில்துறையினருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பல்லடத்தை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில்,“துணி உற்பத்தி தொழிலுக்காக வங்கியில் வாங்கிய கடனை கூட திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின் கட்டண விவகாரத்தில் அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. இதனால், வழக்கமான துணி உற்பத்தி மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது. வழக்கமாக, ஆயுத பூஜைக்கு பின் தீபாவளி நேரத்தில் தான் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்கள், வேலை இல்லாததால் இப்போதே அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தொழில் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

The post விசைத்தறி தொழிலாளர்கள் சொந்த ஊர் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: