ரூ86.36 லட்சம் மோசடி: டெல்லி ஆசாமி கைது

பெரம்பலூர்: திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் அப்துல்கனி பாஷா(72). எல்ஐசி வாடிக்கையாளரான இவரை சில வாரங்களுக்கு முன் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், உங்களது சேமிப்பு முதிர்வு தொகையை எங்களது நிறுவன கணக்கில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என கூறியுள்ளார். அதை நம்பிய அப்துல்கனி பாஷா மர்மநபர் குறிப்பிட்ட கணக்கில் ரூ.86,36,963ஐ டெபாசிட் செய்தார். பின்னர் தான் அந்த நபர், ஆன்லைன் மூலம் தன்னை ஏமாற்றி பணத்தை மோசடி செய்த விபரம் அப்துல்கனி பாஷாவுக்கு தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் அவர் புகார் செய்தார்.இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், முக்கிய குற்றவாளி டெல்லியை சேர்ந்த அபினேஷ் குமார் சிங் என்பது தெரியவந்தது. இதையடுத்து பெரம்பலூர் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் நிர்மலா, புதுக்கோட்டை சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் லெட்சுமி மற்றும் போலீசார் டெல்லி சென்று அபினேஷ்குமார் சிங்கை கைது செய்து அழைத்து வந்தனர். திருச்சி கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தி முசிறி சிறையில் அடைத்தனர். …

The post ரூ86.36 லட்சம் மோசடி: டெல்லி ஆசாமி கைது appeared first on Dinakaran.

Related Stories: