ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சனி பிரதோச வழிபாடு

ராமநாதபுரம், ஜூலை 16: ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சனி சிறப்பு பிரதோச வழிபாடு நேற்று மாலையில் நடந்தது. சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோசம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன் படி ஆனி மாத சனிக்கிழமையான நேற்று நடந்த சிறப்பு பிரதோசத்தை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயிலுள்ள நந்தியம் பெருமானாருக்கு மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு, திரவியப்பொடி, பால், சந்தனம், நெய், விபூதி உள்ளிட்ட 18 பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, தாழம்பூ சாற்றி பூஜைகள் நடந்தது. மாலையில் ரிஷப வாகன ஊர்வலம் கோயில் உள்பிரகாரத்தில் நடந்தது.

இதனை போன்று ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர், முகவை ஊரணி விசலாட்சி உடனுரை காசிவிஸ்வநாதர் கோயில், நயினார்கோயில் சவுந்தரநாயகிஅம்மன் உடனுரை நாகநாதர், சாயல்குடி மீனாட்சிஅம்மன் உடனுரை கைலாசநாதர், மாரியூர் பவளநிறவள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர், ஆப்பனூர் குழாம்பிகை உடனுரை திருஆப்பநாதர், டி.எம்.கோட்டை கருணாகடாச்சி அம்மன் உடனுரை செஞ்சிடைநாதர், மங்களம் ரேனுகாம்பாள் உடனுரை ஆதிசிவன் உள்ளிட்ட சிவன் கோயில்களிலுள்ள நந்தியம் பெருமானாருக்கு மஞ்சள், பால், தேன், இளநீர் உள்ளிட்ட பல வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன், வில்வ அர்ச்சனை மற்றும் மகா தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சனி பிரதோச வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: