ரட்டாசி 3வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி, அக்.8: புரட்டாசி 3வது சனிக்கிழமையையொட்டி தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலையில் கோ பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. பத்மாவதி தாயார் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பெருமாள்கோயில் அறங்காவவர் குழுத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் சிவன்கோயில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி, பெருமாள் கோயில் தலைமை அர்ச்சர் வைகுண்டராமன், அறங்காவலர்கள் மந்திரமூர்த்தி, பாலசங்கர், ஜெயபால், முருகேஸ்வரி, சிவன்கோவில் அறங்காவல் குழுத் தலைவர் ரெங்கசாமி, அறங்காவலர்கள் ஆறுமுகம், சாந்தி, ஜெயலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

கோவில்பட்டி: கோவில்பட்டி பூவனநாத திருக்கோயிலுடன் இணைந்த பூதேவி நீலாதேவி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று புரட்டாசி 3வது சனிக்கிழமையையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, உறுப்பினர்கள் திருப்பதிராஜா, சண்முகராஜா, ரவீந்திரன், நிருத்திலட்சுமி, செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவகளைபிரியா, எழுத்தர் மாரியப்பன் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு கருடசேவை நடந்தது.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் நேற்று புரட்டாசி 3வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post ரட்டாசி 3வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: