தொடர் கஞ்சா விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருவாரூர், ஜூலை 3: திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை, ஆன்லைன் லாட்டரி விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குடவாசல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஓகை சிவன்கோவில் தெருவை சேர்ந்த பாலுச்சாமி மகன் இளையராஜா (37) என்பவர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு நன்னிலம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் விற்பனைக்காக வைத்திருத்த ஒரு கிலோ எடையுள்ள கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்நிலையில் கஞ்சா விற்பனைக்காக ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட வழக்ககள் இவர் மீது பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வரும் நிலையில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வருவதாலும், பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி அவரது எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் செயலில் ஈடுப்பட்டு வருவதாலும் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரை செய்ததன் பேரில் இதற்கான உத்தரவை கலெக்டர் சாரு நேற்று வழங்கினார். இதையடுத்து போலீசார் மூலம் இளையராஜா திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post தொடர் கஞ்சா விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: