வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 395 குவிண்டால் பருத்தி ஏலம்

வலங்கைமான் : வலங்கைமானில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் 395 குவிண்டால் ரூ.20 லட்சத்து 41 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டது. வலங்கைமானில் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி அருகே புதிதாக ஒழுங்குமுறை விற்பனை கூடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் லாயம், விருப்பாட்சிபுரம், சித்தன்வாளூர், செம்மங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பருத்தி சாகுபடசெய்துள்ள  238 விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தரப்பில் பருத்தி மூட்டைகள் ஏலத்தில் பங்கேற்பதற்காக கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டனர்.

இவர்கள் அதிகபட்ச விலையாக ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 389க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.4 ஆயிரத்து 749க்கும், சராசரி விலையாக ரூ.5 ஆயிரத்து 162க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. இதன்படி ஏலத்தில் 395 குவிண்டால் பருத்தி ரூ.20 லட்சத்து 41 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டது. இந்த பருத்தி மறைமுக ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் வீராச்சாமி முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: