முதல்வரின் கண்ணொளி காப்போம் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கல்

 

பெரம்பலூர்,ஜன.20: அரணாரை ஊராட்சி ஒன்றி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் கண் பரிசோதனை அடிப்படையில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின்கீழ், பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட முகாமில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மருத்துவக்குழுவினரால் கண்கள் பரிசோதனை செய்து, அதில் கண் கண்ணாடி அணிய வேண்டிய அவசியமுள்ள 8 மாணவ மாணவியருக்கு மருத்துவக்குழு பரிந்துரை செய்து,தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளிக் காப்போம் திட்டத்தின் கீழ் கண்ணாடிகள் பெறப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று அந்த 8 மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமாவதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகராட்சியின் 17வது வார்டு கவுன்சிலர் அரணாரை துரை. காமராஜ் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.

The post முதல்வரின் கண்ணொளி காப்போம் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: