முசிறியில் நூலக கட்டிட பணி நகராட்சிகளின் மண்டல செயற்பொறியாளர் ஆய்வு

 

முசிறி, ஏப்.26: திருச்சி மாவட்டம் முசிறியில் பாலத்து மாரியம்மன் கோயில் அருகில் பழைய நூலகம் இருந்தது. இந்த கட்டிடம் சேதமடைந்ததால் தற்போது தா.பேட்டை சாலையில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் நூலகத்திற்கு தேவையான வசதிகள் தற்போது ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வருகிறது.

இந்தப் பணிகளை நகராட்சிகளின் மண்டல செயற்பொறியாளர் பார்த்திபன் நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க ஆலோசனைகள் வழங்கினார். மேலும் உள்கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மண்டல செயற் பொறியாளர் ஆய்வின்போது நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி நகராட்சி களப்பணியாளர் சையது பீர் ஒப்பந்ததாரர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post முசிறியில் நூலக கட்டிட பணி நகராட்சிகளின் மண்டல செயற்பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: