முக்கட்டி மாரியம்மன் கோவில் திருவிழா பறவைகாவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

 

பந்தலூர், ஏப்,15 : பந்தலூர் அருகே பிதர்காடு முக்கட்டி பகுதியில் மாரியம்மன் கோவில் வருடாந்திர திருவிழாவில் பக்தர்கள் பறவைகாவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே பிதர்காடு முக்கட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

தொடர்ந்து கொடியேற்று நிகழ்ச்சி சிறப்பு பூஜைகளுடன் மதியம் பிதர்காடு பகுதியில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்டை மேளம் முழங்க பறவைகாவடி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். மதியம் அன்னதானம் நிகழ்ச்சி அதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை சிறப்பு பூஜைகளுடன் மாவிளக்கு பூஜை மற்றும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திருவிழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர்,ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 

The post முக்கட்டி மாரியம்மன் கோவில் திருவிழா பறவைகாவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: