உருளைக்கிழங்கு பயிர் பராமரிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்

ஊட்டி, அக். 25: ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள உருளைக்கிழங்கு பயிர்களை பராமரிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் 1200 ெஹக்டர் பரப்பளவில் உருளைகிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. கேரட்டிற்கு அடுத்தப்படியாக உருளைகிழங்கு அதிகளவு பயிரிப்படுகிறது. இந்நிலையில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் இருந்து விவசாயிகள் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடை போகமாக உருளைகிழங்கு பயிரிடுவதில் விவசாயிகள் தீவிரம் காட்டினார்கள்.

தாமதமாக உருளைகிழங்கு விதைக்கும் பட்சத்தில் 3 மாத கால பயிரான உருளை கிழங்கு விளைச்சல் டிசம்பருக்கு தள்ளி போய்விடும் என்பதால் முன்கூட்டியே விதைப்பு பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக நல்ல விளைச்சல் உள்ள நிலையில், அவற்றை பராமாிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post உருளைக்கிழங்கு பயிர் பராமரிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: