ஊட்டியில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்ததானம், மரம் நடும் விழா

ஊட்டி, அக்.25: இந்திய செஞ்சிலுவை சங்கம், ஊட்டி அகில இந்திய வானொலி மற்றும் ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் மற்றும் மரம் நடும் விழா ஊட்டியில் நடந்தது. விழாவில் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அகில இந்திய வானொலி நிகழ்ச்சி தலைமை அதிகாரி உன்னி கிருஷ்ணன் வரவேற்றார். உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் அவர்கள், நீலகிரி செஞ்சிலுவை சங்க தலைவர் கேப்டன் மணி, இந்திய செஞ்சிலுவை மாவட்ட செயலாளர் மோரிஸ் சாந்தா குருஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ஹரிணி தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆகியோர் முன்னிலையில் நிலையத்தில் பணிப்புரியும் பொறியாளர் பிரிவு மற்றும் அலுவலகப் ஊழியர்கள், நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சி தயாரிப்பு உதவியாளர்கள், பண்பலை நேயர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டு ரத்த தானம் செய்தும் மரக்கன்றுகளை நட்டனர். தமிழ்நாடு அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் தலைமை உரையாற்றி தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை திட்டங்களையும், மக்கள் நல திட்டங்களையும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகில இந்திய வானொலி நிலைய அலுவலர்கள் ஜான் எபினேசர், மனோகர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

The post ஊட்டியில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்ததானம், மரம் நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: