பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியில் இலக்கிய படைப்புகள் குறித்து 123-வது கருத்தரங்கம்

பாலக்காடு, அக். 24: பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரி தமிழ்த்துறை மற்றும் தமிழ்ப்பண்பாட்டு ஆய்வு மையம் சார்பில் வானவில் ரவியின் இலக்கிய படைப்புகள் குறித்து 123-வது கருத்தரங்கு நடைபெற்றது. இதில் திரளாக மாணவ, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கை பிரபல கவிஞரும், மலையாள திரைப்பட பாடலாசிரியருமான ராஜீவ் ஆலங்கால் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குநர் டாக்டர் கு.அ.ராஜாராம் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் டாக்டர் சஜானா பானு அறிமுக உரையாற்றினார்.

தமிழ்த்தறை முன்னாள் தலைவர் டாக்டர் எம்.எஸ்.பாண்டியன், பாலக்காடு பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் சி.எஸ்.வி.தம்பிரான், தமிழ்க்கலை மன்ற செயலாளர் மாதவன், சித்தூர் அரசு கல்லூரி தமிழத்துறை இணை பேராசிரியை டாக்டர் சல்மா, ஜி.வி.சி தமிழ்த்துறை துணை பேராசிரியை டாக்டர் ராதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அட்டப்பாடி அரசு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் சிவமணி, சித்தூர் அரசு கல்லூரி தமிழ்த்துறை துணை பேராசிரியர் டாக்டர் ரவி ஆகியோர் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். முடிவில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், இருமொழி கவிஞருமான வானவில் ரவி ஏற்புரை நிகழ்த்தினார். முன்னதாக உதவி பேராசிரியை வனிதா வரவேற்றார், முடிவில் உதவி பேராசிரியை சுனிதா நன்றி கூறினார்.

The post பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியில் இலக்கிய படைப்புகள் குறித்து 123-வது கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: