மின் மாற்றியை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஜெயங்கொண்டம், ஜூலை 7: ஜெயங்கொண்டம் அடுத்துள்ள கல்லாத்தூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள குறைந்த மின் அழுத்தம் உள்ள மின்மாற்றியை மாற்றித் தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஜெயங்கொண்டம் அடுத்துள்ள கல்லாத்தூர் அண்ணா நகர் பகுதியில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்துள்ள கல்லாத்தூர் அண்ணா நகர் பகுதி மக்களின் வீடுகளுக்கும் மற்றும் விவசாயத்திற்கென தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் குறைந்த மின் அழுத்தம் கொண்டதாக உள்ளதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் மின்மாற்றி முற்றிலும் பழுதடைந்ததால் அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் சுமார் 200 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்விநியோகம் பாதிப்படைந்துள்ளது. இதனால் மீண்டும் ஒரு டிரான்பார்மர் பொருத்தி மின்சாரம் வழங்கி வந்துள்ளனர். இதில் தொடர்ந்து குறைந்த மின்னழுத்தம் பதிவானதை அடுத்து பல வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்தனர். இதனை பலமுறை மின்வாரியத்திற்கு தெரிவித்தும் மின்மாற்றியை மாற்றவில்லை. இதனை கண்டிக்கும் விதமாக அண்ணாநகர் பகுதி பொதுமக்கள் விருதாச்சலம்- ஜெயங்கொண்டம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஜெயங்கொண்டம் காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் மின்வாரியத் துறையினரிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post மின் மாற்றியை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: