மாநகராட்சி திட்ட ஆய்வாளர் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை

ஈரோடு: ஈரோடு காமாட்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (48). இவர் 2007 ஜனவரி மாதம் அவரது தாய் சிவகாமி  பெயரில் வீடு கட்டுவதற்கான உரிமம் மற்றும் கட்டிட திட்ட அனுமதி பெறுவதற்காக  ஈரோடு மாநகராட்சி டவுன் திட்ட பிரிவில் விண்ணப்பித்தார். அப்போது  மாநகராட்சி டவுன் திட்ட ஆய்வாளரான வெங்கடேசன் (51) மற்றும் அலுவலக உதவியாளர்  ரவி (57) ஆகியோர் ரூ.5  ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். அதன்படி ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தபோது, திட்ட ஆய்வாளர்  வெங்கடேசனையும், அலுவலக உதவியாளர் ரவியையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை ஈரோடு முதன்மை  குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் விசாரித்து, வெங்கடேசன், ரவி ஆகிய  இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10  ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். …

The post மாநகராட்சி திட்ட ஆய்வாளர் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: