போலீஸ்காரருக்கு மிரட்டல் பெண் யூடியூபர் கைது

சமயபுரம்: பணியில் இருந்த போலீஸ்காரருக்கு மிரட்டல் விடுத்த பெண் யூடியூபர் கைது செய்யப்பட்டார். திருச்சி நம்பர் 1 டோல்கேட் நாமக்கல், சேலம், அரியலூர் மாவட்டங்களுக்கு வாகனங்கள் பிரிந்து செல்லும் முக்கிய சந்திப்பாகும். இச்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் நேற்று சேலத்தில் இருந்து டால்மியாபுரம் நோக்கி லாரி சென்றது. லாரி நம்பர் 1 டோல்கேட்டில் வந்த போது, காஸ் சிலிண்டர் ஏற்றி சென்ற டூவீலரிலிருந்து சிலிண்டர் நழுவி லாரிக்கு அடியில் ஓடியது. உடனே லாரியை நிறுத்தி டூவீலரை எடுக்க முயன்றனர். இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் அரசு, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

இதை அந்த வழியாக டூவீலரில் வந்த திருச்சி பாலக்கரையை சேர்ந்த யூடியூபர் கிரிஜா(35), தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதைப்பார்த்த போலீஸ்காரர் அரசு, கிரிஜாவை அங்கிருந்து செல்லும்படி கூறினார். ஆனால் அவர் நகராமல், நான் ஒரு செய்தியாளர், வக்கீல், யூடியூபர் என கூறி போலீஸ்காரரை திட்டினார். இதை போலீஸ்காரரும் தனது ெசல்போனில் வீடியோ எடுத்தார். எடு..எடு… உன்னால் என்னை என்ன செய்ய முடியும், நான் எஸ்பிக்கிட்ட பார்த்துக்கிறேன் என எஸ்பியின் பெயரை ஒருமையில் கூறி, போலீஸ்காரரை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ்காரர் அரசு, கொள்ளிடம் போலீசில் புகார் அளித்தார். அதில், பணியிலிருந்த தன்னை கிரிஜா பணி செய்யவிடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டினார்.

உன்னை காலி செய்யாமல் விடமாட்டேன் என மிரட்டியதாக கூறியுள்ளார். இதையடுத்து கிரிஜா மீது வழக்குப்பதிவு அவரை இன்று காலை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கிரிஜா மீது ஏற்கனவே இதுபோல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைதான கிரிஜா, கடந்த ஆண்டு காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மீது, தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கலெக்டரிடம் மனு அளித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் மாம்பழச்சாலையில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது குற்றச்சாட்டு கூறியதால் அவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post போலீஸ்காரருக்கு மிரட்டல் பெண் யூடியூபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: