மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

 

திருப்பூர், டிச.20: மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு திருப்பூரில் இருந்து நிவாரண பொருட்கள் திருப்பூரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இதனை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களில் அதி கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு. திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்படும் நிவாரண பொருட்களை, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டார்.

இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது: தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைப்பொழிவு காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. மழையிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்திலிருந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 02 வாகனங்களின் மூலம் 13,000 பெரிய அளவிலான பிஸ்கட் பாக்கெட்களும், 20,628 பிஸ்கட் பாக்கெட்களும், 190 பிரட் பாக்கெட்கள் ஆகிய நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. வாகனத்தின் மூலம் அனுப்பி வைக்கப்படும் நிவாரணப் பொருட்கள் ஆய்வு செய்து அனுப்பிவைக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், நியமன அலுவலர் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் விஜயலலிதாம்பிகை, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: