மயிலாடுதுறை அருகே அரசு கொள்முதல் நிலையத்திற்காக கட்டிய களம் தனிநபர் ஆக்கிரமிப்பு: மீட்கக்கோரி கலெக்டரிடம் ஊராட்சி தலைவர் மனு

மயிலாடுதுறை, செப்.26: மயிலாடுதுறை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்காக ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிமெண்ட் களத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தரக் கோரி கலெக்டரிடம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாந்தை கிராமத்தில் நத்தம் புறம்போக்கு இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுவதற்கான சிமெண்ட் களம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டது. மேலும் நிரந்தர கட்டிடத்திற்கு எஸ்ஆர்எம் அலுவலகத்திலிருந்து அனுமதியும் வழங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த இடத்தினை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து அவர்கள். குடும்பத்தைச் சார்ந்த 12 நபருக்கு பட்டா வழங்க கோரி குத்தாலம் தாசில்தாரிடம் மனு அளித்துள்ளனர். அந்த இடத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், அது களத்து புறம்போக்கு என்று ஊராட்சி மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் தனியார் வசம் இருக்கும் நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று திமுக ஊராட்சி மன்ற தலைவி சசிகலா திருமுருகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். மேலும் அருகில் உள்ள இரண்டு ஏக்கர் நத்தம் புறம்போக்கு நிலத்தை நிலம் இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்ட பிரித்து வழங்க வேண்டும் என்றும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகூரை சுற்றி வசிப்பவர்கள் தங்களது வீடுகளில் போர்வெல் போட்டதால் பல ஆண்டுகாலமாக தண்ணீர் பஞ்சத்தை போக்கிய கிணற்றை மறந்து விட்டனர்.

The post மயிலாடுதுறை அருகே அரசு கொள்முதல் நிலையத்திற்காக கட்டிய களம் தனிநபர் ஆக்கிரமிப்பு: மீட்கக்கோரி கலெக்டரிடம் ஊராட்சி தலைவர் மனு appeared first on Dinakaran.

Related Stories: