மணப்பாறை வட்டத்தில் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 2025-26ம் ஆண்டு நேரடி சேர்க்கை

 

திருச்சி, ஜூன் 26: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொழிற்பயிற்சி நிலையம் மணப்பாறை வையம்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக பழைய கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. எனவே 2025-26ம் ஆண்டிற்கான பயிற்சியாளா் சோ்க்கை ஜூன் 19 முதல் நேரடிச் சோ்க்கையாக நடைபெற்று வருகிறது.

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் 10-வது மற்றும் 8-வது தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தொழிற்பிரிவில் சோ்வதற்கு அசல் சான்றிதழ்கள் (மாற்றுச் சான்றிதழ், 10-வது மற்றும் 8-வது மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார்அட்டை)-உடன் நோில் சென்று சோ்ந்து பயடையலாம். தொழிற்பிரிவு:1. Architectural draughtsman., 2.Opearter advanced machine tools, 10th pass, 3.Technician electronics system design – கல்வித்தகுதி (10th pass).4. Welder-8th pass பெற்றிருக்க வேண்டும். மேலும் இது தொடா்பான விவரங்களு க்கு 80729 65487, 94436 44967 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்ற தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தொிவித்துள்ளார்.

The post மணப்பாறை வட்டத்தில் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 2025-26ம் ஆண்டு நேரடி சேர்க்கை appeared first on Dinakaran.

Related Stories: