மஞ்சூர் ஹெத்தையம்மன் கோயில் திருவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது

மஞ்சூர்: மஞ்சூரில் ஹெத்தையம்மன் கோயில் திருவிழா மிக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது.நீலகிரி  மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள படுகரின மக்கள் வசிக்கும் கிராமங்களில்  ஹெத்தையம்மன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து மஞ்சூர்ஹட்டி  மற்றும் மணிக்கல் கிராமங்களின் சார்பில் நேற்று ஹெத்தையம்மன் திருவிழா  கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மஞ்சூர் மாரியம்மன் கோயில் வளாகத்தில்  உள்ள ஹெத்தையம்மன் கோயிலில் பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள்  மற்றும் மகாதீபாராதனை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து ஹெத்தையம்மனுக்கு  நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மஞ்சூர், மணிக்கல்  சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த படுகரின மக்கள் பாராம்பரிய வெள்ளையுடைகளை  அணிந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு காணிக்கை செலுத்தினார்கள்.  ஆண்டுதோறும் மஞ்சூரில் ஹெத்தையம்மன் திருவிழாவை படுகரின மக்கள் ஆடல், பாடல்  கலைநிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் தற்போது  கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு வழிகாட்டு நெறிமுறைகளை  பின்பற்றி குறைந்த அளவிலான பக்தர்களே கலந்து கொண்டதுடன் முககவசங்கள்  அணிந்து சமூக இடைவௌியை கடைபிடித்தபடி காணிக்கை செலுத்தி சென்றனர்.குன்னூர்: குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தை சுற்றியுள்ள காரக்கொரை, மஞ்சுதளா, மல்லிகொரை, பேரட்டி, ஓதனட்டி, பிக்கட்டி உட்பட ஆறு ஊர்களை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து விழாவை கொண்டாடுகின்றனர். அதன்படி விரதம் இருந்த ஹெத்தைக்காரர்கள் கடந்த ஏழு நாளாக, காரக்கொரை கிராமத்தில் உள்ள “மக்கமனை’ என்ற கோவிலில் தங்கி, சிறப்பு பூஜை நடத்தினர். பின், ஹெத்தையம்மன் குடையை ஏந்தியவாறு, ஆறு ஊர்களில் உள்ள கோவில்களுக்கும் சென்று, சிறப்பு பூஜை செய்தனர். கடந்த இரு நாளுக்கு முன் காரக்கொரை கோவில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூ குண்டம் இறங்கி, நேர்த்தி கடன் செலுத்தினர். ஆறு ஊர் படுகரின மக்கள் வெள்ளை சீலை போர்த்தி, பாரம்பரிய உடையணித்து, பாண்டு வாத்திய இசைக்கு மத்தியில், ஹெத்தையம்மன் குடையை ஏந்தியவாறு, பாரம்பரிய நடனமாடியபடி ஜெகதளா கிராமத்துக்கு ஊர்வலமாக வந்தனர். மதியம் 1.30 மணிக்கு ஜெகதளா கிராமத்தில் “மடிமனை’ என்ற இடத்தில் உள்ள ஹெத்தையம்மன் சிலையை அலங்கரித்து, ஊர்வலமாக அழைத்து வந்தனர்.  பக்தர்கள் காணிக்கையை அம்மனுக்கு செலுத்தினர்….

The post மஞ்சூர் ஹெத்தையம்மன் கோயில் திருவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: