மக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம்: ஜான்பாண்டியன் வாக்குசேகரிப்பு

சென்னை: எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவர்  சென்ற இடங்களில் பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் மலர்தூவி, ஆரத்தி எடுத்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். அப்போது, பொதுமக்கள் எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என்று வாக்குறுதி அளித்தனர். தொடர்ந்து 107வது வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிக்கூட சாலை, ஜெகநாதபுரம் 1வது தெரு, மாடல் சந்து, மீன் மார்க்ெகட், ரங்கநாதபுரம், டோபிகானா  தெரு, சிட்டி பாபு தெரு, தனபால் தெரு, மங்களாபுரம் ஆகிய பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் மக்களின் குறைகளை கேட்டறிந்து, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களுடைய கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வரிடம் எடுத்துக்கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். மக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.  எனவே, இரட்டை சிலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார். அதிமுக, பாஜக, பாமக மற்றும் கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற எழும்பூர் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஜான்பாண்டியன் பங்கேற்றார். …

The post மக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம்: ஜான்பாண்டியன் வாக்குசேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: