பெரம்பலூர்,மே 6: பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில், பக்தர்களின் பாதம் சுடாதிருக்க அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு குளிர்ச்சியூட்டும் வண்ண சாயம் பூசப்பட்டது. பெரம்பலூர் நகராட்சியில் துறையூர் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில், பக்தர்களின் நலன்கருதி அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு, சுற்று பிரகாரம் முழுவதும் வெயிலில் நடக்க முடியாமல், பிரகாரம் வர முடியாமல் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் சிரமமுற்றனர். எனவே சுற்றுப்பிரகாரம் முழுவதும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், சென்னை கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயில், தஞ்சை பெரிய கோயில் மற்றும் பிரசித்தி பெற்ற கோயில்களில் உள்ளதுபோல் சுற்று பிரகாரம் வலம் வரும் நடைபாதை முழுவதும் (கூலிங் பெயிண்ட்) பக்தர்களின் பாதம் சுடாதிருக்க குளிர்ச்சியூட்டும் வண்ண சாயம் பூசப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை தக்கார் உமா, கோவில் செயல் அலுவலர் ரவிச்சந் திரன், சித்ரா பவுர்ணமி விழா குழுவினர் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
The post பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் சுற்று பிரகாரத்தில் கூலிங் பெயிண்ட் appeared first on Dinakaran.
