பெரம்பலூர்,ஏப்.28: பெரம்பலூர் கல்பாடி கிராமத்தில் அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவர்கள் மலேரியா தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் 4ஆம் ஆண்டு வேளாண் கல்லூரி மாணவர்கள், கிராமத் தங்கல் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டம், கல்பாடி கிராமத்தில் மாணவர்கள் பிரகதீஷ்வரன், பிரணவ் குமார், பிரசாத், பிரவின் குமார், பிரித்தீஷ், புகழேந்தி, ரோசன் ராஜ், சபரிநாதன், சாம்எபினேசர், சந்தீப் குமார், சந்தோஷ் ஆகியோர் மலேரியா நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விளக்கமளித்தனர். மேலும் கிராமப்புற மக்களுக்கு நோய்கள் பற்றி மாணவர்கள் உரையாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
The post பெரம்பலூர் கல்பாடி கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் மலேரியா நோய் விழிப்புணர்வு appeared first on Dinakaran.
