பல்லடம், டிச.3: பிரம்மனின் நாடிக் கொடி என வர்ணிக்கப்படும் பிரம்மகமலம் பூவை நிஷாகந்தி பூ என்றும் அழைப்பார்கள். பிரம்மாவிற்கு படைக்கப்படும் பூ என்றும் அதனால் பிரம்ம கமலம் என்று பெயர் வந்தது என்றும் கூறுவார்கள். இந்தப்பூ ஆண்டுக்கு ஒரே ஒருமுறை மட்டும் மலரும் பவுர்ணமி சமயங்களில், இரவு நேரங்களில் மலர்ந்து அடுத்த நாள் வாடிப் போய்விடும்.
ஒரே ஒருநாள் மட்டும் தான் பூ மலர்ந்து இருக்கும் இந்தப் பூவின் நறுமனம் பூச்செடி உள்ளபகுதி முழுவதும் வீசும் தன்மை உடையது. இந்தநிலையில் பல்லடம் பாரதிபுரத்தில் உள்ள பல்லடம் நகர திமுக பொருளாளர் குட்டி பழனிச்சாமி என்பவரது வீட்டில் பல்வேறு பூச்செடிகளை உள்ளது. இதில் பிரம்ம கமலம் பூ உள்ளது. நிலையில் நேற்று இரவு பிரம்ம கமலம் செடியில் ஒரே நேரத்தில் 15 பூக்கள் பூத்தது. இந்த பூக்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
The post பூத்துக்குலுங்கிய பிரம்மகமலம் பூக்கள் appeared first on Dinakaran.