மழை பாதிப்புகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டுபாட்டு அறை அமைப்பு

 

திருப்பூர், அக்.21: திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்டப்பொறியாளர் விஜயகுமார், இளநிலைப்பொறியாளர் ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகரில் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் திருப்பூர் வடக்கு பிரிவு அலுவலக வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெள்ள கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கீழ் திருப்பூர் வடக்கு உட்கோட்டம் மற்றும் வடக்கு பிரிவு சார்பில் வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்படும் பாதிப்புகளை அவ்வப்போது கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சாலைகள் மற்றும் பாலங்களில் மழைநீர் தேங்காவண்ணம் நொடிகள் போடுதல் மற்றும் நீர்வழிப்பாதைகளில் உள்ள அடைப்புகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் வகையில் சாலைப்பணியாளர்கள், மணல் மூட்டைகள், மரம் வெட்டும் இயந்திரம், எச்சரிக்கைபலகைகள், கருவி தளவாடங்கள், லாரி, உருளை மற்றும் ஜே.சி.பி இயந்திரம் ஆகியவை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் வெள்ள கட்டுபாட்டு மையம் அமைத்து மழை பாதிப்புகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

The post மழை பாதிப்புகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டுபாட்டு அறை அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: