மண்ணரையில் மழைநீர் தேங்கிய பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை

 

திருப்பூர், அக். 23: மண்ணரையில் மழைநீர் தேங்கிய பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க செல்வராஜ் எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண்டார். திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்வராஜ் எம்.எல்.ஏ. அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில், மண்ணரை பகுதியில் பாளையக்காடு பெட்ரோல் பங்க் எதிர்புறம் கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கியது. இதனால், பொதுமக்கள் பல்வேறு சிரமத்தை சந்தித்து வந்தனர்.

இதனையறிந்த செல்வராஜ் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, அந்த பகுதியில் மழைநீர் தேங்கிய 2 இடங்கள் கண்டறியப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் சிறு பாலம் மற்றும் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் மற்றும் கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் வார்டு செயலாளர் இளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post மண்ணரையில் மழைநீர் தேங்கிய பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: