புங்கமுத்தூர் ஊராட்சி அலுவலகம் திறப்பு

 

உடுமலை, ஜூலை 11: உடுமலை ஒன்றியம் புங்கமுத்தூரில் ரூ.23 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை அமைச்சர் சாமிநாதன் நேற்று முன்தினம் திறந்துவைத்தார். மேலும், எரிசனம்பட்டி, கே.ரெட்டிபாளையம், அந்தியூர், பெரிய பாப்பனூத்து ஆகிய ஊராட்சிகளில் ரூ.3.36 கோடி மதிப்பீட்டில் முதல்வரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சாலை சீரமைப்பு பணியையும் அமைச்சர் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன், அவைத்லைவர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளரும், தேவனூர்புதூர் ஊராட்சி மன்ற தலைவருமான செழியன், ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், துணைத்தலைவர் சண்முகவடிவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரதி கோவிந்தராஜ், கலாமணி மோகன், பாலதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் திலகவதி, புவனேசுவரி, ஒன்றிய திமுக நிர்வாகிகள் பழனிக்குமார், ராம்குமார், கிருஷ்ணவேணி, சரவணப்பெருமாள், முருகேசன், மோகன், கனகராஜ், ஆனந்தராஜ், மலர்விழி பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திமுகவில் இணைந்த பாஜவினர்: நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில், செல்லப்பம்பாளையத்தை சேர்ந்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்த ராகுல் (கோவை மாவட்ட ஏபிவிபி ஒருங்கிணைப்பாளர்), மணி ராம், ஞானசூரியன், நிகோஷ் லிங்கம், ராஜீவன், கவுதம், விக்னேஷ், சுபாஷ், ஜி.மணிகண்டன், எம்.மணிகண்டன், நாவரசன், தினேஷ், ஜீவானந்தம், பிரனேஷ் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

The post புங்கமுத்தூர் ஊராட்சி அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: