இந்தியா பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு!: கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை..!! May 05, 2021 பிரதமர் மோடி இங்கிலாந்து போரிஸ் ஜான்சன் கொரோனா தில்லி இந்தியா மோடி தின மலர் டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து இந்திய பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இருவரும் காணொலி வாயிலாக உரையாடினர். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் ரெம்டிசிவிர் மருந்து, ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு பல இடங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை சரிசெய்ய, பல உலக நாடுகள் இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டி வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, சீனா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு சர்வதேச நாடுகள் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்ய முன்வந்துள்ளன. இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இணைந்து செயலாற்றுவது குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி காணொலி மூலமாக உரையாடல் நடத்தினார். இந்த உரையாடலின் போது, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் 2030ம் ஆண்டு வரை இந்தியா, இங்கிலாந்து ஆகிய 2 நாடுகளும் இணைந்து செயலாற்ற வேண்டிய முக்கிய விவகாரங்கள் குறித்த தொலைநோக்கு பார்வையுடன் கூடிய ‘ரோட்மேப்’ 2030 என்ற பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு வளர்ச்சிக்கு தேவையான முக்கிய அம்சங்கள் கவனம் செலுத்தப்படும் என இருநாட்டு பிரதமர்களும் தெரிவித்துள்ளனர். … The post பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு!: கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை..!! appeared first on Dinakaran.
சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி
மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு
அரசியலமைப்பை பாதுகாக்க இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை நீக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
சபரிமலையில் மண்டல காலத்தில் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்
மிகப்பெரிய சோஷலிஸ்ட் நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: தொண்டர்கள் அலப்பறையால் பீகாரில் பரபரப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் அன்ன வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த மலையப்ப சுவாமி: நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிய சீடர்கள்
அதானி குழும பங்கு முறைகேடு புகார் செபி தலைவர் மாதபிக்கு சம்மன்: நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு அதிரடி
சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒன்றிய அரசு கடன் வாங்கி தரும்: தமிழக அரசு தான் திருப்பி செலுத்த வேண்டும் ஒன்றிய நிதியமைச்சகம் புதிய விளக்கம்
2 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்தது அரியானா, காஷ்மீரில் காங். ஆட்சியை பிடிக்கும்: பாஜ படுதோல்வி அடையும்
திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்