பாபநாசம் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கொடியேற்று விழா

கும்பகோணம், மே 9: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 12 இடங்களில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தில்லைவனம் தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமு தர்மராஜன் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பொன் சேகர், துணை செயலாளர் கனகராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் புகழேந்தி, ரெங்கசாமி, பொன்னையன், பாலாஜி, ஜெயராமன், மதியழகன், சந்திரா, ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பாபநாசம் ஒன்றிய குழு சார்பில் பிஜேபி ஆட்சியை அகற்றுவோம், நாட்டையும் மக்களையும் காப்போம் என நடைபயண இயக்கம் மேற்கொண்டனர்.

இக்கூட்டத்தில் பாபநாசம் அரையபுரம் தட்டுமால் சாலையில் சீரமைக்க வேண்டும், தஞ்சையில் இருந்து காேணூர், வையச்சேரி, புண்ணியநல்லூர், சூலமங்கலம், அய்யம்பேட்டை வழியாக பாபநாசம் வரை நகர பேருந்துகளை இயக்க வேண்டும், உமையாள்புரம் வடக்கு காமராஜர் தெருவில் சேறும் சகதியுமாக இருக்கக்கூடிய சாலையை சீர்படுத்த வேண்டும், புண்ணியநல்லூர் கீழத்தெரு சாலையை சீர்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

The post பாபநாசம் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கொடியேற்று விழா appeared first on Dinakaran.

Related Stories: