பாண்டி அரசு பள்ளியில் சர்வதேச யோகா தின விழா

 

முத்துப்பேட்டை, ஜூன் 22: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பாண்டி அரசு உயர் நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. பட்டதாரி ஆசிரியை அனந்தலட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி அறிவுத் திருக்கோயில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் பேராசிரியர்கள் அருள்நிதி மேனகா பேராசிரியர் அருள்நிதி கற்பகம் இருவரும் மாணவர்களுக்கு யோகாசன பயிற்சிகள் அளித்தனர். மேலும் யோகா தினமும் செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்து கூறினர். இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.

The post பாண்டி அரசு பள்ளியில் சர்வதேச யோகா தின விழா appeared first on Dinakaran.

Related Stories: