பாஜ சாதனை விளக்க பொதுக்கூட்டம்

 

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே கச்சூர் கிராமத்தில் பூண்டி கிழக்கு ஒன்றிய பாஜ சார்பில் பாஜ ஆட்சியின் 9வது ஆண்டு சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் ஒன்றிய தலைவர் சாந்தி ஜான்சன் தலைமை தாங்கினார். மாவட்ட அரசு தொடர்பு துறை துணைத்தலைவர் வரதராஜன், ஒன்றிய துணைத்தலைவர்கள் நாகராஜ், நதியா, செயலாளர் ரம்யா, தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் பாலாஜி பத்மநாபன் கலந்துகொண்டு பாஜவின் சாதனைகள் குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் மகளிரணி பொதுச்செயலாளர் ராஜேஸ்வரி, துணைத்தலைவர்கள் லட்சுமி, ரதி, தகவல் தொழில்நுட்பதுறை மாவட்ட தலைவர் கோதண்டன், தனுஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பாஜ சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: