மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களின் கலந்தாய்வை நடத்த கோரிக்கை

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு: அரசு பள்ளிகளில் 350க்கு மேல் 700க்கும் குறைவாக மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு 2 உடற்கல்வி ஆசிரியர்களும், 700க்கு மேல் 1500 வரை மாணவர்கள் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் என்றால் 3 உடற்கல்வி ஆசிரியர்களும், மேல்நிலைப் பள்ளி என்றால் ஒரு உடற்கல்வி இயக்குநர் மற்றும் 2 உடற்கல்வி ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும் அப்போதுதான் இப்போது உள்ள சூழலில் மாணவர்களை நல்வழிப் படுத்தமுடியும். மாணவர்கள் விளையாட்டிலும் பெருமளவில் நாட்டம் கொண்டு சாதிப்பார்கள். எண்ணிக்கையின் அடிப்படையில் மாணவர்கள் நலன்கருதி உடற்கல்வி ஆசிரியர்களின் பணிநிரவல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களின் கலந்தாய்வை நடத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: