பழுதான கட்டிடத்தை சீரமைக்க பூமி பூஜை

தர்மபுரி, டிச.16:தர்மபுரி எஸ்வி ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 9 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியின் வகுப்பறை கட்டிடம் பழுதடைந்தது. இதையடுத்து மாநில நிதி நிறுவனங்களின் பள்ளி மேம்பாட்டு மானியத்தில் இருந்து, பழுதடைந்த வகுப்பறைகளை ₹18 லட்சம் மதிப்பில் மராமத்து மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

நேற்று வகுப்பறை கட்டிடம் மராமத்து செய்யும் பணியை, நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன், துணை தலைவர் நித்யா அன்பழகன், கவுன்சிலர் சத்யா, நகர திமுக நிர்வாகி முல்லைவேந்தன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post பழுதான கட்டிடத்தை சீரமைக்க பூமி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: