பர்மிங்காம் காமன்வெல்த்: வண்ண மயமான நிறைவு விழா

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வந்த 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடர், வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. மொத்தம் 72 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 24 வகை விளையாட்டு போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தினர். இந்தியா 22 தங்கப் பதக்கம் உளபட மொத்தம் 61 பதக்கங்களை கைப்பற்றி 4வது இடம் பிடித்தது. நிறைவு விழா அணிவகுப்பில் டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் அசந்தா சரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிக்கத் ஜரீன் தேசியக் கொடியேந்தி தலைமை வகிக்க, இந்திய குழுவினர் உற்சாக நடை போட்டனர். அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடந்த வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கை, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. அரங்கில் இருந்த காமன்வெல்த் கொடி முறைப்படி இறக்கப்பட்டு, 2026ல் அடுத்த போட்டி நடக்க உள்ள ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண ஆளுநரிடன் ஒப்படைக்கப்பட்டது. வீரர்களுக்கு உற்சாக வரவேற்புகாமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை வென்று நாடு திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விளையாட்டு கூட்டமைப்பு, சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் திரண்டு மாலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்துச் சென்று சாம்பியன்களை கொண்டாடினர். …

The post பர்மிங்காம் காமன்வெல்த்: வண்ண மயமான நிறைவு விழா appeared first on Dinakaran.

Related Stories: