பருவமழை எதிரொலி வீடு வீடாக டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

 

கோவை, ஜூலை 27: கோவையில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மழைநீர் தேங்கும் பட்சத்தில் அதில் டெங்கு கொசு குழுக்கள் வளர வாய்ப்புள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 6,500 தெருகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியில் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஆய்வின்போது நல்ல தண்ணீர் தொட்டிகள், வீட்டில் தேவையற்ற பொருட்களை மழை நீர் படும்படியாக வைத்தல் போன்றவற்ற ஆய்வு செய்து அதில் அபேட் மருந்து ஊற்றியும், டயர், தேங்காய் மட்டை போன்ற தேவையற்ற பொருட்கள் இருந்தால் அதனை அப்புறப்படுத்தியும் வருகின்றனர். மேலும் அவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் வருகின்றனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்களில் கட்டிடத்தின் மேல் பகுதியில் மழைநீர் தேங்கும் வண்ணம் இருந்தாலும் அல்லது குடிநீர் தொட்டி திறந்து இருந்தாலும் அதிலிருந்து கொசு புழுக்கள் வளர்வதற்கு காரணமாக இருந்தால் அதனை கண்டறிந்து அதனை அழித்தும், கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர்.

The post பருவமழை எதிரொலி வீடு வீடாக டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: