கல்லூரிகளுக்கு இடையே பூப்பந்து போட்டி பிஎஸ்ஜி கல்லூரி அணி முதலிடம்

 

கோவை, அக்.18: கோவை பாரதியார் பல்கலை சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்து போட்டி நடைபெற்றது. லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டிகளில் பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்றது. இதன் முதன் லீக் போட்டியில் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி அணி 3-0 என்ற செட் கணக்கில் கேபிஆர் கலை அறிவியல் கல்லூரி அணியை வென்றது. இரண்டாவது லீக் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அணி 3-0 என்ற செட் கணக்கில் ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி அணியை வென்றது.

மூன்றாவது லீக் போட்டியில் கேபிஆர் கலை அறிவியல் கல்லூரி அணி 3-2 என்ற செட் கணக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அணியை வென்றது. நான்காவது போட்டியில், பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி அணி 3-0 என்ற செட் கணக்கில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி அணியை வென்றது. ஐந்தாவது போட்டியில் கேபிஆர் கலை அறிவியல் கல்லூரி அணி 3-0 என்ற செட் கணக்கில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி அணியை வென்றது.

ஆறாவது போட்டியில் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி அணி 3-1 என்ற செட் கணக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அணியை வென்றது. இந்த லீக் போட்டியில் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி அணி முதல் பரிசை வென்றது. கேபிஆர் கல்லூரி அணி இரண்டாம் இடமும், ஸ்ரீ ராமகிருஷ்ணன் கல்லூரி அணி முன்றாம் இடமும், ஹிந்துஸ்தான் கல்லூரி அணி நான்காம் இடமும் பிடித்தது.

The post கல்லூரிகளுக்கு இடையே பூப்பந்து போட்டி பிஎஸ்ஜி கல்லூரி அணி முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: