பனைமரங்களில் பேய், பிசாசு ஒளித்து கொண்டிருக்கும் என்கின்றனரே, இது உண்மையா?

நிச்சயமாக இல்லை. இது முற்றிலும் மூடநம்பிக்கையே. ‘பூலோக கற்பகத்தரு’ என்று பனைமரத்தைச் சொல்வார்கள். தரு என்றால் மரம் என்று பொருள். கற்பக விருட்சம் என்பது சொர்க்கலோகத்தில் உள்ள ஒரு மரம். இதன் அடியில் அமர்ந்து என்ன நினைத்தாலும் அது உடனடியாக வந்து சேருமாம். கற்பக விருட்சத்தின் கீழ் அமர்ந்து நான் மிகப்பெரிய செல்வந்தனாக வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக செல்வம் வந்து சேர்ந்துவிடுமாம். அதே போல பனை மரம் என்பது மிகுந்த செல்வ வளத்தினைத் தரவல்லது. பனை மரத்தின் ஓலை விசிறியாகப் பயன்படும். நுங்கு உடலுக்கு நல்லது. பனை மரத்திலிருந்து கிடைக்கும் கள்ளு உடலுக்கு வலிமை சேர்க்கும். அந்த மரத்தினைப் பிளந்தாலும் அதிலிருந்து கிடைக்கும் வாரையானது வீட்டின் உத்திரத்தை அதாவது மேல்கூரையைத் தாங்கும் வலிமை கொண்டது. இத்தனைக்கும் பனைமரத்தினை வளர்ப்பதற்கு என்று தனியாக செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. பனைமரத்தின் அத்தனை பாகங்களும் மனிதனின் உபயோகத்திற்குப் பெரிதும் பயன்படுவதாலேயே பனைமரத்திற்கு பூலோகத்தின் கற்பக விருட்சம் என்ற பெயர் உண்டானது. இதில் பேய், பிசாசு ஒளிந்துகொண்டிருக்கும் என்று சொல்வது முற்றிலும் தவறானது. அதே நேரத்தில் ஒற்றைப் பனைமரம் என்பது ஆகாது என்று விருட்ச சாஸ்திரம் சொல்கிறது. அதாவது ஒருவருடைய நிலத்தில் தனியாக ஒற்றைப் பனைமரம் என்பது மட்டும் இருக்கக் கூடாது. பனைமரங்களின் எண்ணிக்கை ஒன்றிற்கு மேற்பட்டதாக இருக்கவேண்டும்….

The post பனைமரங்களில் பேய், பிசாசு ஒளித்து கொண்டிருக்கும் என்கின்றனரே, இது உண்மையா? appeared first on Dinakaran.

Related Stories: