பட ரிலீசுக்கு 7 தேதிகளை ‘லாக்’ செய்த நானி

ஐதராபாத்: தனது புதிய படத்தின் ரிலீசுக்கு 7 தேதிகளை ‘லாக்’ செய்திருக்கிறார் நடிகர் நானி. நானி நடிப்பில் கடைசியாக வெளியான ஷியாம் சிங்கராய் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் அடுத்து நடிக்கும் அன்டே சுந்தரானிக்கி படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்ட நஸ்ரியா நாசிம், மீண்டும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அன்டே சுந்தரானிக்கி படம் மூலம் முதல் முறையாக தெலுங்கில் அறிமுகம் ஆகிறார். கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கி, தற்போது பாதிப்பும் குறைந்து வருவதால், பல படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளன. இந்நிலையில் அன்டே சுந்தரானிக்கி படத்துக்கு 7 தேதிகளை படக்குழு ‘லாக்’ செய்துள்ளது. ஏப்ரல் 29ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை 7 வாரங்களில் உள்ள ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த படத்துக்காக தேர்வு செய்துள்ளனர். இதில் ஏதேனும் ஒரு நாளில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். சில பெரிய படங்கள் 2 தேதிகளை ‘லாக்’ செய்யும்போது, நாங்கள் 7 தேதிகளை ‘லாக்’ செய்யக் கூடாதா என சமூக வலைத்தளத்தில் நானி கேட்டிருக்கிறார். ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்துக்கு 2 தேதிகளை தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது….

The post பட ரிலீசுக்கு 7 தேதிகளை ‘லாக்’ செய்த நானி appeared first on Dinakaran.

Related Stories: