பட்டுப்புடவை பார்சல்களில் மறைத்து சென்னையிலிருந்து ஆஸ்திரேலியா கடத்திய ரூ.1.2 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்: மத்திய போதை தடுப்பு பிரிவினர் நடவடிக்கை

சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் சரக்கு விமானத்தில், பார்சல்களில் மறைத்து பெருமளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய போதை தடுப்புப்பிரிவு தனிப்படையினர் சென்னை விமான நிலையம் வந்து ஆஸ்திரேலியா செல்ல இருந்த சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்ட பார்சல்களை சோதனையிட்டனர். அப்போது, பட்டுப்புடவைகள் அடங்கிய பார்சல்களில் 8 கிலோ சூடோ நெப்ரின் என்ற போதைப் பொருள் இருப்பது தெரிந்தது. அதை கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.80 லட்சம். இதையடுத்து மத்திய போதை தடுப்பு அதிகாரிகள், வழக்குப்பதிவு செய்து, அந்த பார்சலை சரக்கு விமானத்தில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு அனுப்ப பதிவு செய்திருந்த ஏஜென்சியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பட்டுப்புடவைகள் பார்சல்கள் காரைக்காலில் உள்ள ஒரு கூரியர் நிறுவனம் மூலம் அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மத்திய போதைப்பொருள் கடத்தல் தனிப்படையினர், காரைக்கால் சென்று, அந்த கூரியர் நிறுவனத்தில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் இந்த பட்டுப்புடவை பாார்சல்களை அனுப்பிய நபர் சென்னையை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து மத்திய போதை தடுப்பு பிரிவு தனிப்படையினர் சென்னை வந்து, சென்னையில் உள்ள அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். அதோடு, மேலும் 4 சூடோ நெப்ரின் போதைப் பொருள் இதுபோல பட்டுப்புடவை பார்சல்களில் வைத்து, அதற்கு முந்தைய சரக்கு விமானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினார். இதையடுத்து, தனிப்படையினர் இதுபற்றி ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.அவர்கள், விமான நிலையத்திலேயே 4 சூடோ நெப்ரின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அவை தற்போது மீண்டும் சென்னைக்கு மற்றொரு சரக்கு விமானத்தில் வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே கைதான சென்னை கடத்தல் ஆசாமியிடம் மத்திய போதை தடுப்பு தனிப்பிரிவினர் விசாரணை நடத்துகின்றனர். அவர், ஆஸ்திரேலியாவிற்கு கடத்திய மொத்தம் 12 கிலோ சூடோ நெப்ரின் போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.1.2 கோடி. இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.* சுங்கச்சோதனையில் தப்பியது எப்படி?சென்னை விமான நிலையத்தில் இருந்து 12 கிலோ சூடோ நெப்ரின் போதை பொருட்கள் 2 தடவையாக சரக்கு விமானங்களில் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. முதலில் அனுப்பிய 4 கிலோ பார்சல், ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள விமான நிலையத்திற்கே போய் சேர்ந்துவிட்டது. அடுத்த 8 கிலோ போதைப்பொருளை மத்திய போதை தடுப்பு பிரிவு தனிப்படையினர் சரக்கு விமானத்தில் ஏற்றியபோது பிடித்துள்ளனர். அப்படியெனில், சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் சுங்கச் சோதனையில் இது கண்டுபிடிக்கப்படாதது ஏன், இதில், அதிகாரிகளும் உடந்தையா என்று விசாரணை நடந்து வருகிறது.* ரூ.1.2 லட்சம் சிகரெட் பறிமுதல் சென்னை பூக்கடை பந்தர் தெருவில் சட்ட விரோதமாக வெளிநாட்டு சிகரெட்களை பதுங்கி, விற்க முயன்ற சூளையை சேர்ந்த கவுரவ் (34) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள 2,540 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்….

The post பட்டுப்புடவை பார்சல்களில் மறைத்து சென்னையிலிருந்து ஆஸ்திரேலியா கடத்திய ரூ.1.2 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்: மத்திய போதை தடுப்பு பிரிவினர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: