இந்தநிலையில் எனது மகனுக்கு அரசு பள்ளியில் இளநிலை உதவியாளர் பணி வாங்கித் தருவதாக கூறினார். இதற்காக ரூ.4.50 லட்சத்தை, எனது வீட்டை அடகு வைத்து நான் கொடுத்தேன். இதே போல எனது உறவினர்கள் உள்பட பலருக்கும் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி பெற்றார். அந்த வகையில் மொத்தம் 27 பேர் தங்களது வீடு மற்றும் நகை ஆகியவற்றை அடமானம் வைத்து மொத்தம் ரூ.1.47 கோடி கொடுத்து உள்ளனர். ஆனால் போலி பணி நியமன ஆணை கொடுத்து ஏமாற்றினார்.
இதற்கு சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியும் உடந்தையாக இருந்துள்ளார். அவர் இப்போது வேறு மாவட்டத்துக்கு மாறி சென்று விட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன், அந்த பெண்ணை தேனி மாவட்டத்தில் கைது செய்து இருப்பதை அறிந்தோம். அவர் மூலம் குமரி மாவட்டத்திலும் பலர் ஏமாந்து உள்ளதால், குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியையும் விசாரணை வளையத்தில் கொண்டு வர வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.
The post அரசு வேலை வாங்கி தருவதாக 27 பேரிடம் ரூ.1.47 கோடி மோசடி: இன்ஸ்பெக்டர், பெண் மீது புகார் appeared first on Dinakaran.