பட்டுக்கோட்டை கிராமங்களில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விழிப்புணர்வு

 

பட்டுக்கோட்டை, மார்ச் 19: பட்டுக்கோட்டை வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் கலாச்சார தெருமுனை கூட்டங்கள் மூலமாக தொழில்நுட்பங்களை பரப்புதல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) அப்சரா துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி ஆலடிக்குமுளை, கரம்பயம், எட்டுப்புளிக்காடு, திட்டக்குடி, சூரப்பள்ளம், துவரங்குறிச்சி, தம்பிக்கோட்டை வடகாடு, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், முதல்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடந்தது.

நிகழ்ச்சியின் மூலம் தொழில்நுட்ப கருத்துக்களை கலை நிகழ்ச்சி வாயிலாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளிடம் கிசான் அட்டை பெறுவது, மண் மாதிரி சேகரிப்பு மற்றும் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக துண்டுப் பிரசுரங்களை வழங்கி அவர்களுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர். கலாச்சதா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப மேலாளர் முருகானந்தம், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் அமிர்தலீலியா மற்றும் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

 

The post பட்டுக்கோட்டை கிராமங்களில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: