நெடுஞ்சாலை துறை சார்பில் மின் கம்பங்கள் சீரமைப்பு

கோவை, ஆக. 18: கோவை தெற்கு கோட்டம் தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் (சிஆர்ஐடீபி) கீழ் பழுதடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை மாற்றும் பணி நடந்து வருகிறது. கோவை குறிச்சி, கண்ணமநாயக்கனூர், நாச்சிபாளையம் ரோட்டில் உள்ள பழுதான மின்கம்பங்களை மாநில நெடுஞ்சாலை துறையினர் கிரேன் உதவியுடன் அகற்றி புதிய மின்கம்பங்களை அமைத்து வருகின்றனர். மேலும், சாலையோரம் இருந்த ஆபத்தான டிரான்ஸ்பார்மர்களும் அகற்றப்பட்டது. போக்குவரத்திற்கு இடையூராக இருக்கும் மின் கம்பங்களும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைந்து முடித்து மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாநில நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர். ரோட்டோர மின் கம்பங்கள், வாகன இயக்கத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் அமைக்க ஆய்வு நடக்கிறது.

The post நெடுஞ்சாலை துறை சார்பில் மின் கம்பங்கள் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: