நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்துடன் ரேஷன்கடை பணியாளர்கள் சங்க இணைப்பு விழா

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கத்துடன் இணையும் விழா நாகப்பட்டினத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ்கண்ணன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் குமார், பாலதண்டாயுதம், காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ராஜேந்திரன், மாநில பொதுச்செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் பேசினர். பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும். விற்பனை முனைய கருவியை மேம்படுத்தி பிரிண்டிங் வசதியுடன் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு புதிய ஆட்கள் தேர்வு செய்வதை கைவிட்டு கடந்த 25 ஆண்டு காலத்திற்கும் மேலாக தற்காலிகமாக பணியாற்றுபவர்களை இடமாற்றம் செய்து பணிநியமனம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் அனைத்து பொருட்களையும் சரியாக எடையிட்டு பொட்டலம் இட்டு வழங்க வேண்டும். விற்பனை முனைய கருவியில் இடம் பெற்றுள்ள அரிசி, ஜீனி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை தவிர மற்ற பொருட்களை விற்பனை செய்ய கட்டாயப்படுத்த கூடாது. தரமான பொருட்களை கொள்முதல் செய்து கட்டுபாடு அற்ற பொருட்களான சோப்பு, மளிகை பொருட்களை மளிகை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் பழனிவேல் நன்றி கூறினார்.

The post நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்துடன் ரேஷன்கடை பணியாளர்கள் சங்க இணைப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: