நாளை வேடபரி துறையூரில் காவல்துறை சார்பில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு பேரணி

 

துறையூர்: துறையூரில் காவல்துறை சார்பாக குற்றத் தடுப்பு விழிப்புணர்வு பேரணி முசிறி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் யாஸ்மின் தலைமையில் நடைபெற்றது. துறையூர் காவல்ஆய்வாளர் செந்தில்குமார், முசிறி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், தா.பேட்டை காவல் பொன் ராமன், தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் ஆகியோர் தலைமையில் நான்கு சரக போலீசார் கலந்து கொண்ட பேரணியை முசிறி டிஎஸ்பி யாஸ்மின் துவக்கி வைத்தார். இந்த பேரணி துறையூர் பாலக்கரையிலிருந்து திருச்சி சாலை வழியாக, பேருந்துநிலையம், முசிறி பிரிவு சாலை ரவுண்டானா வரை நடைபெற்றது.

துறையூர் காவல்துறை சார்பில் பேரணியில் துறையூர் பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு, சட்டம் ஒழுங்கிற்கு காவல்துறையே பொறுப்பு என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையிலும் இப்பேரணி நடைபெற்றது. பேரணியில் துறையூர், முசிறி தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post நாளை வேடபரி துறையூரில் காவல்துறை சார்பில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: