நாகை அபீதகுஜாம்பாள் கோயிலில் பங்குனி உத்திரவிழா தேரோட்டம்

நாகை: நாகை அமரநந்தீஸ்வரர், அபீதகுஜாம்பாள் கோயில் பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. நாகையில் அமரநந்தீஸ்வரர், அபீத குஜாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறும். இவ்வாண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 23ம் தேதி வசந்த உற்சவமும், 24ம் தேதி திருக்கல்யாணமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. சிறப்பு தீபாராதனையுடன் சுவாமி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்து பக்தர்கள் தியாகேசா என கோஷத்துடன் தேரை இழுத்துச் சென்றனர். இன்று (28ம் தேதி) தீர்த்தவாரி உற்சவமும், நாளை (29ம் தேதி) ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது….

The post நாகை அபீதகுஜாம்பாள் கோயிலில் பங்குனி உத்திரவிழா தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: