நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதியில் சேர நாளை (30ம்தேதி) விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதியில் சேர வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் நலப்பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர்க்கை நடைபெற உள்ளது. இச்சேர்க்கை திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் நல மாணவ, மாணவிகள் விடுதி சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்லூரி மற்றும் பள்ளி விடுதிகளுக்கு வரும் 30ம் தேதிக்குள் https://tnadw.hms.in விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: